நம்பியூர் அடுத்த காராப்பாடியில் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்

Election boycott protest in Karappadi next to Nambiur

நம்பியூர் தாலுகாவிற்கு உட்பட்ட காராப்பாடி கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில் கரட்டுப்பாளையம் ‘‘பி’’ கிராமம் காரப்பாடியில் 200க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு அரசு வழிகாட்டி மதிப்பீடு வழங்காததால் தேர்தல் புறக்கணிப்பு செய்து கிராம மக்கள் வீதிகளில் தடுப்புகள் மற்றும் பேனர்கள் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவல் தெரிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கடத்தூர் இன்ஸ்பெக்டெர் துரைப்பாண்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.அதனை ஏற்காத பொதுமக்கள் நம்பியூர் தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அரசு அடையாள அட்டைகளை ஒப்படைப்பதாக கூறி நம்பியூர் தாலுகா அலுவலகத்திற்கு சென்று ஒப்படைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தில் ஈடுபட்ட காராப்பாடி பொது மக்களிடம் நம்பியூர் தாசில்தார் மாலதி, வி.ஏ.ஓ சண்முகம் ஆகியோர் மாவட்ட பதிவாளர் பூங்கொடி, மற்றும் நம்பியூர் சார்பதிவாளர் ஹேமா ஆகியோரிடம் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தி விரைந்து தங்களது வீட்டு மனைகளுக்கு வழிகாட்டி மதிப்பீடு (விலை நிர்ணயம்) செய்து கொடுக்கப்படும் என உறுதியளித்தார். தேர்தல் முடிவதற்குள் தங்களது பகுதியில் உள்ள வீடுகளுக்கு வழிகாட்டி மதிப்பீடு செய்து தரப்படும் என உத்தரவாதம் அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் தங்களது போராட்டத்தை விலக்கிக் கொண்டு கலைந்து சென்றனர்.இதுகுறித்து அப்பகுதி கிராம மக்கள் கூறியதாவது:நாங்கள் கரட்டுப்பாளையம் கிராமம் காராப்பாடி பகுதியில் வசித்து வருகிறோம். இப்பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது தற்போது மொத்தம் இப்பகுதியில் 411 வீட்டுமனைகள் உள்ளன அதில் சுமார் 273 வீட்டு மனைகளுக்கு வழிகாட்டி மதிப்பீடு வழங்கவில்லை, இதனால் நாங்கள் வங்கியில் லோன் வாங்கவோ, எங்களது சொத்துக்களை பிரித்து எழுதுவோ, விற்பனை செய்யவோ, அடமானம் செய்யவோ எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ளது. இது தொடர்பாக நாங்கள் மாவட்ட பதிவு அலுவலர், நம்பியூர் தாசில்தார், நம்பியூர் சப் ரிஜிஸ்டர் ஆகியோரிடம் தொடர்ந்து கடந்த 2 வருடங்களாக புகார் மனுக்களை அழைத்து வந்தோம் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளாதால் நாங்கள் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பு செய்கிறோம்.மேலும் எங்களது ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு, உள்ளிட்ட அனைத்தையும் நம்பியூர் தாசில்தாரிடம் ஒப்படைக்க உள்ளோம். எங்களது கோரிக்கைகளை ஏற்கும்வரை வருகின்ற அனைத்து தேர்தலையும் புறக்கணிப்பு செய்வது என முடிவு செய்துள்ளோம்.மேலும் எங்கள் பகுதிக்குள் யாரும் ஓட்டு கேட்டு வர வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம் என்றனர்.

ஆசிரியர், வெளியீட்டாளர்

Leave the first comment

மற்ற பதிவுகள்